வெள்ளி, டிசம்பர் 15, 2006

Yahoo விடும் தூது !

1



இப்பொழுதெல்லாம்
அடிக்கடி எனக்கு கோவம்
வருகிறது
நீ ஆன்லைனில் இல்லாத
நேரங்களில்


2




நான் உனக்கு மெயில்
எழுத உக்காந்தாலே
ஏன்தான் இந்த கடிகாரம்
வேகமாக சுற்றுகிறதோ ?


3



பேசிப்பேசியே
களைத்துபோனது
நம் விரல்கள் !


4



நீ ஒருமுறை என்னிடம்
‘ சாட் ‘ செய்தாலே
நான் பல கவிதைகளை
திருடிவிடுகிறேன்


5



உன் கடிதம் இல்லாத
என் ‘இன்பாக்ஸை’
திறப்பதற்குபதில்
திறக்காமலே இருக்கலாம்

6



‘ ச்சீய் போடா !! ‘
எங்கிருந்து கற்றுகொண்டாய்
இந்த அழகான வார்த்தையை
எங்கே இன்னொருமுறை
சிணுங்கு ?!!


7



பெறாத முத்ததிற்காக
நீயும்
கொடுக்காத முத்ததிற்காக
நானும்
வெட்கப்படுகொண்டிருக்கிறோம்
மெசெஞ்சரில் !


8


சீக்கிரம் ஆன்லைனில்
வாயேண்டி !!
அவசரமாக உனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும் !!


9



யார் யாரோ வந்து
ஹாய் சொல்லிவிட்டு
சென்றபோதெல்லாம்
சும்மா இருந்த என்
மெசெஞ்சர்
நீ வந்தபோது மட்டும்
ஆனந்த கூத்தாடுகிறது
[ டேய் நான் Buzz பண்ணிணேண்டா !
மத்தவங்க பண்ணலே
]


10


‘ என்னடா ரொம்ப உற்சாகமாய்டே?'
என கேட்கிற என் நண்பனிடம்
எப்படி சொல்வது
இப்பொழுதுதான்
நான் உன்னிடம் ‘சாட்’
பண்ணிவிட்டு வருகிறேன் என்று !



11


கண்டவளோட ‘சாட்’
பண்ணிட்டு இருக்கத்தான்
எப்பவுமே நீ ‘ஆன்லைனில்’
இருக்கிறாய் என ஏன்
என்னிடம் சண்டை போடுகிறாய் ?
நீ வரும்போது வரவேற்கத்தான்
நான் மெசெஞ்சர் மீது
விழிவைத்துக் காத்திருக்கிறேன்
நம்பித்தொலையேண்டி ..


12


கோபமாக என்னிடம்
சொல்கிறாய்
‘ எனக்கு வர்ற ஆத்திரத்திற்கு
உன்னை..’

‘ என்ன கட்டிப்பிடித்து
முத்தம் கொடுக்க வேண்டும்போல்
இருக்கிறதா ?? ‘

என கேட்டவுடனே
நீ அனுப்பிய
கோப ‘ ஐகான்’
வெட்க ‘ஐகானாக’
மாறுவது ரொம்ப
அழகுடி .


13

இப்படியெல்லாம் என்னிடம்
பேசினால் நான் உன்னை
நான் என் மெசெஞ்சரில்
இருந்து ‘கட்’ பண்ணிவிடுவேன்
என்கிறாய்
ஆனால் உன் கை என்னவோ
‘ டைப்’ செய்துகொண்டேதான்
இருக்கிறது .



14


ஹையோ ! இப்பொழுதெல்லாம்
உன்மீது ‘ஆன்லைனில்’
கூட என்னால்
கோபபட முடியவில்லையே
என்ன செய்வேன் ?

திங்கள், டிசம்பர் 11, 2006

சா - தீ

என்ன சாதி ?



“சாதிகள்
இல்லையடி
பாப்பா “
கேட்டதும்
கேட்கிறோம்
சொன்னவர்
என்ன சாதி ?



விடுதி



“சாதிகள்
இல்லையடி
பாப்பா !! “
விபச்சார
விடுதிக்குள்
நுழையும்போது
மட்டும் !!



அணை


“சாதிகள்
இல்லையடி
பாப்பா “
சீக்கிரம்
விளக்கை
அணை !


தேர்தல்


“சாதிகள்
சேருது
சண்டைகள்
தொலையுது “
தேர்தல்
வந்தால்
மட்டும்.



மீதம் எதற்கு




ஆண்சாதி
பெண்சாதி
மீதமெல்லாம்
எதற்கு சாமி ?

வெள்ளி, நவம்பர் 24, 2006

கொஞ்சும் இன்பம்...

meesai



எனக்கு வெட்கம் என்றால்
என்னவென்றே தெரியாதவளாக
இருந்தேன்
உன் மீசை குத்தும் வரை



Konju



கொஞ்சம் என்னை திட்டு
என்னை திட்டிவிட்டு
நீ கெஞ்சுவதைப்போல்
கொஞ்சுவது
எனக்கு மிகவும் பிடிக்கிறது


vetkam




இப்பொழுதெல்லாம் நான்
அடிக்கடி அழகாக
வெட்கப்படுகிறேனாம்
சொல்கிறார்கள் என் தோழிகள் !
நீ தொலைபேசி வழியே என்னுடன்
பேசும்போது கூட
சும்மா இருந்தால் தானே ?



kaatru




உன்னைபோலவே
இந்த காற்றும்
சும்மாவே இருப்பதில்லை
பார் என் மேலாடையை
சும்மா விடுகிறதா ?


poraamai




முன்பெல்லாம் உன்னுடன்
எந்தப்பெண் பேசினாலும்
கவலைப்படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமைப்படுகிறேன்



vendaam



வர வர உன் குறும்புக்கு
ஒரு எல்லையே இல்லாமல்
போய்விட்டது
நான் வேண்டாம் என்றாலே
உடனே அதை செய்ய
ஆரம்பித்துவிடுகிறாய்.



manasu



என் மனதில் நீதாண்டா
இருக்கிறாய் என ஏன் தான்
சொன்னேனோ
எங்கே காட்டு என
இப்படி என் உடை
கலைத்தால் எப்படி ?


porukki



நீ ஒரு பொறுக்கி
என்று திட்டினால் கூட
‘ஆமாம்! என்னைப்பார்த்து
சிதறிக்கிடந்த உன் இதயத்தான்
பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய்
ச்சீய் போடா பொறுக்கி !!!
ஏன் இப்படி கூறி என் வெட்கத்தை
சிதறடிக்கிறாய் ?


samiyal



சமயலறையில் வந்து
ஏன் இப்படி தொல்லை செய்யுறே
இப்போ என்னை சமையல் செய்ய
விடப்போறியா இல்லையா
என நான் கோவமாக
சொன்னாலும் பொய்யாகத்தான்
சொல்கிறேன் என
எப்படிடா கண்டுபிடிக்கிறாய் ?


sweetlips


உனக்காக நான் சமைத்த
பலகாரம் எப்படி இருக்கிறது
எனக்கேட்டால்
உன் உதடுகளை விட
ஒன்னும் சுவையாக இல்லை
என்றால் எப்படி ?
எப்படி திட்டுவேன் உன்னை இனி ?


cinema




என்னை சினிமாவிற்கு
கூட்டிகிட்டு போ என்றால்
வீட்டிலேயே உனக்கு நான்
படம் காட்டுகிறேன் என்கிறாயே
திருடா !!
நீ என்ன படம் காட்டுவாய்
தெரியாதா ?



honeymoon

நம் தேனிலவுக்கு எங்கே
செல்லலாம் என கேட்டால்
கட்டிலுக்கு என்கிறாயே
சீசீய்... வர வர உன்னை....

வியாழன், நவம்பர் 16, 2006

எனக்கு மதம் பிடிக்கிறது

மதமில்லா மதம்



மதம்
பிடிக்காத
மதம்
பிடிக்கும்
மதம்
இல்லாத
மதம்
இருக்கிறதா ?



அண்டம் கடவுள்


அண்டம் காக்கும்
கடவுளைப் பார்க்க
காத்திருக்கிறேன்
தரிசன
வரிசையில்





கடவுள் காட்சி



எனக்கு மட்டும்
காட்சி தருகிறார்
என் கடவுள்
விஷேச கட்டணத்தில்



நான் பாவி



நான் ஒரு
பாவி என்று
மற்றொரு பாவி
சொல்லிக்கொண்டிருக்கிறார்




என் கடவுள்



என் கடவுள்
காக்கும் கடவுள்
என் மதத்தினரை
மட்டும்



உண்டியல்





இது உண்டியல்
அல்ல
நான் தெரிந்தேசெய்த
தவறுகளை
அங்கீகரிக்க
நான் கடவுளுக்கு
அளிக்கும்
தூண்டில்




குலதெய்வம்


தெய்வம்
எனக்குச் சொந்தமா
தெரியாது
ஆனால்
எனக்குச் சொந்தமாக
குலதெய்வமே
இருக்கிறது






கடவுளை தேடி




கடவுளைத்தேடி
சென்ற
இடமெல்லாம்
நான்
இருந்தேன்
கடவுள் மட்டும் இல்லை



மதம் உயர்வு




என் கடவுள்
மட்டுமே
உயர்ந்தவர்
என்று
தாழ்ந்தவர்கள்
சண்டையிட்டுக்கொள்கிறார்கள்



மத மனிதன்



மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லை



திருடர்




என்னைக் காப்பாற்ற
வேண்டிய கடவுளுக்கு
திருடர்களிடம்
தன்னைக் காப்பாற்ற
இயலவில்லை



அந்நியர்கள்



அந்நியர்கள்
யாரும்
உட்பிரவேசிக்கக்கூடாது
என கடவுளின்
சந்நிதானத்தில்
கடவுளுக்கு
அந்நியமானவர்கள்
எழுதிவைத்திருக்கிறார்கள்



தாயுள்ளம்




தாயுள்ளம் கொண்ட
கடவுள்
தாயார்கள் தொட்டாலே
தீட்டாகிவிடும்
மாயம் என்ன ?




தீண்டாமை




தீண்டாமை நன்று
கடவுளின் பெயரால்
சக மனிதனின்
உணர்வுகளை
தீண்டாமை நன்று

புதன், நவம்பர் 08, 2006

திமிறும் திமிர்

thimir 1




நீ வருவதைப் பார்த்த
புகைவண்டி அறிவிப்பாளர்
சொன்னது
ஒரு அழகிய திமிர்
திமிறும் அழகோடு வருகிறது



thimir 2





உன் திமிரை நான்
அடக்கமுடியுமா என
ஏன் கேட்கிறாய் ?
அப்புறம் திமிரிக்கொண்டு
ஓடுவாய் பரவாயில்லையா ?



thimir 3






கைகால்கள் அடங்கி இருக்கும்
என்றால் மட்டுமே
என்னுடன் சினிமாவிற்கு
வருவேன் என
ஏன் இப்படி அடம்பிடிக்கிறாய்
அப்புறம், உன்னை போலவே
என் கைகளும் அடம்
பிடிக்கும் சொல்லிவிட்டேன்





thimir 4





இனி நீ சிகரெட் பிடித்தால்
உன்னுடன் பேசவே போவதில்லை
என என்னுடன் சண்டையிட்டு
சென்ற சோகத்தை மறக்க
இரண்டு பாக்கெட் சிகரெட்
சாம்பலானது உனக்கு தெரியுமா?





thimir 5





கொஞ்சம் கூட உனக்கு
பொறுப்பேயில்லை
என என் அறையை
சுத்தம் செய்தபோது
நீ சொன்னபோது
அப்படியே என் உதடுகளையும்
சுத்தம் செய்துவிட்டுப்போ
என நான் கேட்டதும் என்ன
அப்படி வெட்கம் உனக்கு ?